Posted by: மீராபாரதி | August 10, 2010

காமம், ஆண்கள், (ளின்) சமூகம், பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

காமம், ஆண்கள், (ளின்) சமூகம், பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

பெண்களின் காமம் சக்தியும் மற்றும் அது தொடர்பான அறிவின் மீதான அடக்குமுறைகளும்!

ஆணாதிக்க சமூகத்தில்; ஆண்களின் காம உணர்வின் தேவையை பூர்த்தி செய்யும் பாலியல் பொருட்களாகவே பெண்கள் பார்க்கப்பட்டுவருகின்றனர். அதேவேளை பொதுவாக பெண்களும் ஆண்களுக்கு சேவை செய்யவும் மற்றும் அவர்களை கவர்வதை நோக்கி தம்மை அழகுபடுத்தவுமே பயிற்றிவிக்கப்பட்டுள்ளார்கள் என பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர். இதன் ஆரம்பமம் பெண்கள் குழைந்தைகளாக இருக்கும் பொழுதுதே ஆரம்பித்துவிடுகின்றது. அதாவது ஒரு பெண் (குழந்தை) எப்படி இருக்கவேண்டும், நடக்கவேண்டும், உடை உடுத்தவேண்டும், என அதன் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளும் என பயிற்றுவிக்கப்படுகின்றது. மேலும் தாயியுடன் வீட்டுவேலைகiளில் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கும் அதேவேளை ஆண்களை அதிலிருந்து விடுவித்தும்விடுகின்றனர். இதற்கும் மேலாக ஆண் குடும்ப அங்கத்தவாகளுக்கு குடும்பத்தில் முதலிடமும் கொடுப்பதும் பெண் குடும்ப அங்கத்தவர்கள் அவர்களுக்கு பணிவிடையும் செய்வது சாதாரண சமூக பழக்கவழக்கமாக ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கே சமூகங்களின் பண்பாடு கலாசராங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக பெண்களின்; முதல் மாதவிடாய் வெளிவந்தவுடன் அந்த செய்தியை, தம் உறவுகளை அழைத்து பெரும் சடங்காக தென்னாசிய சமூகங்களில் மட்டுமல்ல புலம் பெயர் தமிழ் பேசும் சமூகங்களிலும் வெகு விமர்சையாக நடாத்தப்படுகின்றது. இதன் அர்த்தம் நம் வீட்டு பெண் பிள்ளைகள் குழந்தை பெருவதற்கு தயார் என்றும் பெண் கேட்டு வாருங்கள் என உறவுகளுக்கு அழைப்பு விடுவிக்கும் ஒரு சடங்காகவே பாரம்பரியமாக பின்பற்றபட்டுவந்திருக்கின்றது. ஐரோப்பிய வட அமெரிக்க சமூகங்களிலோ இதற்கு மாறாக பெண்களுக்கு நடைபெறும் இந்த உடலியல் மாற்றமானது இரகசியமானதாகவும் அசிங்கமானதாகவும் பார்க்கப்படுவதாக இதுதொடர்பான பெண்ணிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பெண்களின் காம உண்ர்வும் அதன் இன்பமும் அவர்களது பாலியல் தேவைகளும், சமூகத்தின் (ஆகவே ஆண்களின்), அக்கறைக்கு அப்பாற்பட்டவை மட்டுமல்ல, மாறாக அவை மிக மோசமாக அடக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதேநேரம் பெண்கள் ஆண்களின் பாலியல் தேவைகளையும் திருப்தி செய்யவேண்டியுள்ளார்கள். இவ்வாறான நிலைமைக்கு, குறிப்பாக பெண்களது காம மற்றும் பாலியல் பாலியலுறவு தொடர்பான அறிவுகளும் அழிக்கப்பட்டு அடக்கப்பட்டு வந்தமையும் ஒரு காரணமாகும். இந்த அறிவுகளுக்கு மாறாக, ஆணாதிக்க இருபால் உறவு சமூகத்தால் தமக்கு ஏற்றபடி செயற்கையான பொய்மையான தகவல்களின் அடிப்படையில், இவை தொடர்பான கருத்துக்களை கட்டமைத்து, பெண்களை காம பாலியல் பொருட்களாக கட்டமைக்கவும் பயன்படுத்தவும் வித்திட்டிருக்கின்றன என சமூக ஆய்வாளர்களும் பெண்ணியவாதிகளும்; குறிப்பிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்களை போகப்; பொருட்களாகப் பார்ப்பதும் மற்றும் அவர்களை வன்புணர்ச்சி செய்வதும், அடக்கி வைத்திருப்பதும் (ஆணாதிக்க) சமூகத்தில் சாதராண நிகழ்வுகளாக இருக்கின்றன.

பெண்களுக்கும் காம உணர்வினால் இன்ப நிலை (orgasm) ஏற்படும் என்பது மிக மிக அண்மைக் காலத்திலையே (மீள) கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட ஒரு விடயம் என்பது ஆச்சரியமானது. அதுவரை பெண்களுக்கு காமத்தினாலான இன்ப நிலை ஏற்படாது என்றே நம்பப்பட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். இது ஒன்றே பெண்களது காம உணர்வு, பாலியல் உறவுகள் மற்றும் அதுதொடர்பான அறிவுகள் எந்தளவு மோசமாக அடக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்கான சாட்சியாக இருக்கின்றது. ஆனால் இந்தப் புதிய அல்லது மீளக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகள் கூட இன்றைய தகவல் தொழில்நூட்ப புரட்சி காலத்தில் கூட விரைவாக அனைத்து மனிதர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சென்றடையவில்லை என்பது துர்ப்பாக்கியமானதே. அதற்கான காரணமும் கவனத்திற்கு உரியது. இது தொடர்பான ஆய்வுகளின்படி குறிப்பாக பெண்களது காம உணர்வினால் ஏற்படும்; இன்பமானது (orgasm) அவர்களது கிளிட்டரஸ் (clitoris) பகுதியிலிருந்து யோனிப்பகுதிக்கு (vagina) மாற்றப்பட்டுள்ளது என பெண்ணியவாதிகள் கூறுகின்றார். அதாவது பெண்ணின் காம மற்றும் பாலியலுறவு இன்பமானது யோனிப் (vagina) பகுதியிலையே இருக்கின்றது என இந்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு நம்பப்பட்டு வந்துள்ளது. ஆனால் யோனி என்பது மறுஉற்பத்திக்கானதும் மற்றும் பெண்களினது உடல்சார்ந்த (மாதவிடாய் போன்ற) தேவைகளுக்கமான முக்கியமான ஒரு உடற்பகுதியே என்கின்றனர் பெண்ணியவாதிகள். இதற்கும் பெண்ணினது பாலியல் இன்பத்திற்கும் (orgasm) நேரடித்தொடர்பில்லை என்றும் கூறுகின்றனர். ஏனனில் பெண்களது கிளிட்டரஸ் பகுதியிலையே அவர்களது காம உணர்;வு தொடர்பான இன்பத்தை (orgasm) அடைவதற்கான பகுதி அமைந்துள்ளது என்கின்றனர்;. இந்த கிளிட்டரஸ் (clitoris) பகுதியானது ஆண்களின் ஆண்குறியின் தலைப் பகுதியின் கீழ உள்ள பகுதிபோன்று பெண்களின் யோனிக்;கு மேற்பாகத்தில் சிறிய தொப்பிபோன்று உள்ளது. ஆண்களுக்கும் இந்தப் பகுதியே மிகவும் காம உணர்வை அதிகம் உணர்த்தும் பகுதியாகும் என ஆய்வுகள் கூறுகின்ற்ன. இந்தப் பகுதிகள் தொடர்பாக பொதுவாக ஆண்களும் பெண்களும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இக் கிளிட்டரஸ் (clitoris) பகுதி மூலம் ஆணின் துணையின்றி பெண் சுயமாக காம உணர்வை பூர்த்திசெய்யவோ அல்லது புணர்வுக்கு முன்பு தானாகவோ அல்லது தனது காதலரின் துணையுடனோ தனது உடலை பாலியல் உறவுக்கு புணர்வுக்கு தயார் செய்யமுடியும். ஆனால் வழமையான (குறிப்பாக குடும்ப) உறவுகளில் ஆண் பெண் இருவருக்குமான பாலியலுறவு நிலைமைகளில் இவ்வாறு நடைபெறுவதில்லை.

வழமையான ஆணாதிக்க சமூகத்தில் இருபால் உறவுகளில் புணர்வின்போது பெண்கள் பெரும்பாலும் காம சுகம் இன்பம் அனுபவிப்பதில்லை எனக் கூறப்படுகின்றது. காரணம் புணர்வுக்கு முன்பான பாலியல் அல்லது காம விளையாட்டுக்களில் (foreplay) இருவரும் ஈடுபடாமையே. குறிப்பாக முதலில் பெண்ணுக்கு உரிய பாலியலுறவுக்கு புணர்வுக்கு முன்னான பாலியல் விளையாட்டுக்களை (foreplay) ஆண் செய்யவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இது; தொடர்பான இருவரதும் அறிவின்மை மற்றும் அக்கறையின்மையானது பாலியல் உறவை நோக்கிய வெறுப்புணர்வை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துகின்றது. ஏனனில் ஆண்களின் காம உணர்வு உருவாவதற்கான நேரமும் பாலியல் உறவில் புணர்வில் ஈடுபடுவதற்கு தம்மை தயார் செய்வதற்கான நேரமும்; பெண்களுடன் ஒப்பிடும் பொழுது (மிக மிகக்) குiறானது. அதாவது ஆண்களது உடல் குறைந்த நேரத்தில் பாலியல் புணர்வுக்குத் தயாராகிவிடுகின்றது. ஆனால் பெண்கள் ஆண்களை விட, தமது உடலை தயார் செய்யவதற்கு சிறிது அதிக நேரம் தேவைப்படும் நிலையில் உள்ளார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் அதற்குரிய சில வேலைகளை இருவரும் செய்யவேண்டி உள்ளது. அதன் பின்பே அவர்களது உடல் புணர்வுக்குத் தயாராகின்றது. இது இருவர்களது உடலியல் சார்ந்த ஒரு விடயம். இது பற்றிய புரிதலின்மையானது பல பிரச்சனைகளை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துகின்றது. ஏனனில் ஆணினது உடனடி தயார் நிலையும் அவனது அதிகாரமும் அதற்கு நேர் எதிரான பெண்ணினது தயாரின்மை, அதிகாரம் இன்மை மற்றும் தயக்கம், வெட்கம் போன்ற சமூகம் கட்டமைத்த பெண்களின் நிலைமைகளும் பல பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் உறவுக்குள் உருவாக்கின்றது. ஏனனில் பெண்களின் விருப்பத்தை அறியமாமல் மட்டுமல்ல அவர்களது உடல் தயார் இல்லாது இருக்கும்போதும் ஆண்கள் தம் பாலியல் தேவைகளையும் விருப்பத்தையும் தமது ஆணாதிக்க பண்புகளினால் உந்தப்பட்டு புணர்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதன் மூலம் ஆணிற்;கு தற்காலிக சிற்றின்ப சுகம் கிடைக்கின்றது. ஆனால் பெண்ணிற்கு வலியும் வேதனையும் மட்டுமே கிடைக்கின்றது. இவ்வாறு ஆண்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் புணர்வுகள் அடிப்படையில் ஒரு வன்புணர்ச்சியாகும்.

பாலியல் வன்புணர்ச்சிகள் தொடர்பாக தனியாக ஒரு கட்டுரை எழுதுவதே நல்லது. இருப்பினும் இக் கட்டுரையின் தேவைக்கமைய வன்புணர்ச்சி நடைபெறும் சந்தர்ப்பங்களை மேலோட்டமாக மூன்று வகைப்படுத்தலாம். முதலாவது திருமண அல்லது குடும்ப உறவுக்குள் அல்லது காதலர்களுக்கு இடையில் நடைபெறுவது. இரண்டாவது போர்க்காலங்களில் எதிரி நாட்டு அல்லது தேசத்து பெண்களுக்கு எதிராக நடைபெறுவது. மூன்றாவது பொதுவாக ஆண்களால் குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது பெண்களுக்கு எதிரான ஆண்களால் பரந்தளவில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வுகளாகும். இவற்றைவிட பாலியல் துன்புறுத்தல்களும் தூஸ்பிரயோகங்களும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக (ஆணாதிக்க) சமூகங்களில் சாதாரணமாக நடைபெறுகின்ற நிகழ்வுகள். ஆனால் இக் கட்டுரை பாலியலுறவு மற்றும் வன்புணர்ச்சி தொடர்பாக மட்டுமே கவனத்தில் கொள்கின்றது.

முதலாவது, திருமண குடும்ப உறவுகளுக்குள், ஆண்களினால் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல்வன்புணர்ச்சி சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ஏனனில் இது இவ்வாறான உறவுகளுக்குள் சாதாரண நடைபெறும் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதனால்தான் திருணமபந்தம் என்பது கூட சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விபச்சாரம் நிறுவனம் என கூறுகின்றனர். ஏனனில்;, தமது ஆண்களின் காம உணர்வையும் பாலியல் தேவைகளையும் மட்டும் எந்த வருமானமுமில்லாது ஆனால் கடமையுணர்வுடனான ஒரு சேவையாக குடும்பங்களுக்குள் வாழும் பல பெண்கள் பூர்த்தி செய்கின்றார்கள். மறுபுறம் ஒரு பாலியல் தொழிலாளி பணத்தைப் பெற்றுக் கொண்டு செய்கின்றாள். இது மட்டுமே, இரு பெண்களுக்குமிடையிலான அடிப்படை வித்தியாசத்தை உருவாக்கின்றது. (இதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே, தம் சிந்தனையில் உடனடியாக மறுக்கின்ற ஆண் வாசகர்களிடம் ஒரே ஒரு கேள்வி உள்ளது. எத்தனை பேர் தாம் திருமணம் செய்த (அல்லது காதலிக்கும்) பெண்ணின் அனுமதியுடன் பாலியலுறவுக்கு செல்கின்றனர். எத்தனைபேர் குறிப்பாக பெண்ணுக்;குத் தேவையான பாலியலுறவுக்கு புணர்வுக்கு முன்பான பாலியல் விளையாட்டுக்களை மேற்கொள்கின்றனர். எத்தனை பேர் உறவின் பின் தாம் உறவு கொண்ட பெண்ணிடம் உறவு திருப்தியாக சுகமாக இருந்ததா எனக் கேட்கின்றனர். இக் கேள்விகளை நீங்கள் தங்களிடம் கேட்ட பின்பு அதற்கான பதிலைக் கண்ட பின்பு தங்கள் மறுப்பை தராளாமாகத் தெரிவியுங்கள். அதுவரை தொடர்ந்தும் பொறுமையாக பிரக்ஞையுடன் வாசியுங்கள். நன்றி.) பிற பாலியல் வன்புணர்வுகளைவிட குடும்பங்களுக்குள் இவ்வாறான வன்புணர்வுகள் அதிகமாக நடைபெறுவது மட்டுமல்ல அவை வெளியே தெரிவதிவருவதுமில்லை. இதற்கு சமூக ஆணாதிக்க கலாசாரங்களும் சமூக கட்டுமானங்களும் காரணங்களாக இருக்கின்றன. சில சமூகங்களில் ஆண் விரும்பும் நேரம் எல்லாம் பெண் பாலியலுறவுக்கு (அதாவது வன்புணர்வுக்கு) தயாராக இருக்கவேண்டும் என்பது எழுதாத சட்டங்களாகவே இருக்கின்றன. உறவுக்கு செல்ல மறுக்கும் பெண்களுக்கு பலவிதமான தண்டனைகளையும் சில சமூகங்கள் வழங்குகின்றன. மறுபுறம் பெண்களும் தமது குடும்ப வாழ்வு கௌரவம் அந்தஸ்து என்பவற்றைப் பாதுகாக்கவும் இவ்வாறான பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமலும் தம் கஸ்டங்களையும் வேதனைகளையும் மறைத்தும் அல்லது நடப்பவை சரியானவை என்றும் ஏற்றுக்கொள்கின்றனர். அல்லது இதுதான் (பெண்களின்) வாழ்வு என்று நம்பிக்கொள்கின்றனர். இவை பிழையானது என புரிந்துகொள்ளும் பெண்களுக்கு, இதைவிட்டு வெளியேறி; தனியாக வாழ்வதற்கான நம்பிக்கையான சுழலும் அவர்களுக்கான ஆதரவும் நாம் வாழும் (ஆணாதிக்க) சமூகங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

இதனால், இவ்வாறன பாலியல் வன்புணர்வுகள் ஆகக்குறைந்தது குடும்ப சூழலுக்குள் அதாவது திருமண பந்தத்தற்குள் நடைபெறாது தடுப்பது எப்படி என சிந்திப்பது அவசியமானது. ஏனனில் முழுமையான சமூக மாற்றம் என்பது உடனடியாக சாத்தயமான ஒன்றல்ல. சமூக மாற்றம் ஒன்று நடைபெறும்வiர் நம்மால் முடிந்த விடயங்களின் சிறு மாற்றங்களையாவது ஏற்படுத்துவது நன்மையானதும் ஆரோக்கியமானதுமாககும். இந்தடிப்படையில் குறைந்தது பாலியலுறவிலாவது பெண்கள துன்பப்படாமல் எப்படி வாழ்வது என்பதற்கான வழிகளைக் காணவேண்டும். இந்த ஆணாதிக்க சமூகத்தின் குடும்ப நிறுவனத்திற்குள் இணைந்து வாழும் ஆணும் பெண்ணும் மேற்குறிப்பிட்ட பாலியல் வன்புணர்ச்சிக்குப் பதிலாக, தமது காம உணர்வின் இன்பத்தை சமநிலையிலான அனுபவிக்க எவ்வாறான பாலியல் உறவில் ஈடுபடவேண்யுள்ளார்கள் என்பது பற்றி பார்க்கவேண்டிய தேவை உள்ளது. இதன் மூலம் பெண்கள் குறிப்பாக நாளாந்தம் முகங்கொடுக்கும் பாலியலுறவு தொடர்பான வேதனைகளை ஒரளவாவது குறைக்கலாம். சமநிலையிலான பாலியல் உறவிற்கு, ஒரு ஆண் தான் பாலியலுறவு கொள்ளப்போகும் பெண்ணுடன்; புணர்வதற்கு முன்பாக பெண்ணிற்குரிய காம பாலியல் விளையாட்டுக்களில் (foreplay) முதலில் ஈடுபடவேண்டிய தேவையிருக்கின்றது என்பதை புரிந்துகொள்வது உறவுக்கு ஆரோக்கியமானது. ஏனனில் பெண்களது உடல் பாலியலுறவுக்கு இயல்பாக தயாரான ஒரு நிலையிலையே, தமது ஆண்களுடன், அவர்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான, புணர்விற்கு முன்பான, காம பாலியல் விளையாட்டுக்களில் (foreplay) பெண்கள் தம் சுய விருப்புடன், ஈடுபட விரும்புவர். இவ்வாறனா ஒரு பாலியலுறவில் தான் இருவரும் முழுமையான காம மற்றும் பாலியலுறவு இன்பத்தை ஒரளவாவது சமமாக அனுபவிக்கலாம். அல்லது வழமையாக நமது சமூக சூழல்களில் நடைபெறும் பாலியல் புணர்வில் ஆணிற்கு வெறும் விந்து வெளியேற்றமும் பெண்ணிற்கு வேதனையுமே விளைவாக கிடைக்கின்றது. பாலியல் விளையாட்டுக்கள் பலவிதம் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் அல்லது தமக்குத்தாமே, தமது உடல்களை பாலியல் விளையாட்டுக்கள் (foreplay) மூலம் பாலியலுறவுக்குத் தயார் செய்தபின்;, புணர்தல் என்பது இருவரது உடல் மற்றும் மனதினதும் தேவையையையும் விருப்பத்தையும் பொறுத்து நடைபெறலாம் அல்லது நடைபெறாமலும் விடலாம். தொடர்ந்தும் பாலியலுறவில் புணர்வில் ஈடுபட விரும்புகின்றவர்கள் எவ்வாறு தமது உடல்களை வைத்திருப்பது என்பது தொடர்பான அறிவிலும் பற்றாக்குறையே நமது சமூகங்களில் நிலவுகின்றது. வழமையான குடும்பங்களில் நடைபெறும் பாலியலுறவுகளில் பெண் கீழேயும் ஆண் மேலேயும் இருக்கின்ற ஒரு நிலையே (Missionary position) மேற்கொள்ளப்டுகின்றது. இந்த நிலையில், பெண்ணின் உடல் பாலியலுறவுக்குத் தயார் இல்லாதபோது ஆணின் உடலானது பெண்ணிற்கு சுமையாகவே இருக்கும். இதனால்தான் வழமையாக இவ்வாறன நிலையில் நடைபெறும் பாலியல் புணர்வு, ஒரு வன்புணர் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஏனனில் இங்கு பெண் தயார் நிலையில் இல்லாதது மட்டுமல்ல பெரும் சுமையை தன் உடல் மீது சுமப்பதாக உணர்வாள். இதற்கு மாறாக பெண்ணின் உடல் பாலியலுறவுக்கு தயார் நிலையில் இருக்கும் பொழுது அதாவது பாலியல் விளையாட்டுகளின் பின்பு மேற்குறிப்பிட்டவாறான ஒரு நிலையில் புணர்விற்கு செல்லும் பொழுது ஆணின் உடல் பொதுவாக சுமையாக இருப்பதில்லை. மாறாக இருவரும் மென்மையான பாரமற்ற உடல்களையே உணர்வர். ஆணும் பெண்ணும், குறிப்பாக பெண்ணிற்கு பாதகமாகவும் வேதனையாகவும் இல்லாமலும், காம பாலியல் இன்பத்தின் அனுபவத்தை அதிகமும் அனுபவிக்கவும் வேண்டுமானால் ஆண் கீழேயும் பெண் மேலேயும் இருக்கும் நிலைமையே சிறந்தது என்கின்றனர். அதாவது ஆண் இயங்காமலும் (passive) பெண் இயங்கும் (active) நிலையில் இருக்கின்ற நிலை இருவருக்கும் நல்லது என பாலியலுறவு புணர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்த மாஸ்டர்;ஸ் அன்ட் ஜோன்சன் (Masters and Johnson) ஆகியோரும் சிபார்சு செய்கின்றனர். அல்லது இருவரும் சமாந்தரமான அதாவது தாமரைப் பூ (lotus position) நிலையிலும் இருக்கலாம். இந்த நிலை மிகவும் நல்லதாக கருதப்படுவதுடன் இருவருக்கும் சுகமாகவும் அதிகமான இன்பத்தையும் வழங்கும் எனக் கூறுகின்றனர். இவ்வாறு காம பாலியல் விளையாட்டுக்கள் மற்றும் பாலியலுறவு நிலைகள் தொடர்பாக விபரிப்பதற்கான காரணம் பாலியலுறவு செயற்பாடுகள் வாழ்க்கைக்கு முக்கியமானவை மட்டுமல்ல ஆரோக்கியமான உடலுக்கும் உறவுக்கும் அவசியமானவை. ஆகவே, ஆண்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாலியலுறவு புணர்தலில் எதிர் மறை அனுபவம் ஏற்படாமல் இருப்பதற்கான வழிவகைகளைக்; அறிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு. மேலும்; உறவில் ஈடுபடுகின்ற இருவரும் ஒருவரை ஒருவர் புரிவதற்கும் இன்பத்தை சமமாக பகிர்ந்து கொண்டு அதிகமாகவும் அனுபவிப்பதற்கும் இந்த அறிவுகள் உதவிபுரியலாம். இது தொடர்பான இங்கு எழுதுவதன் நோக்கம், இக் கட்டுரையின் இறுதிப்பகுதியில் பத்திரிகைகைளில் பரபரப்பாக பேசப்பட்ட பாலியலுறவு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு உதவியாக இருக்கும். இக் கட்டுரையை எழுதத் துண்டியதே பத்திரிகைகளில் வந்த விடயங்கள் தான்.

இச் சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட்டுச் செல்வது நல்லது. அதாவது பொதுவாக மனிதர்களின் மனம் புணர்தல் மூலம் மட்டுமே காம பாலியலுறவு இன்பத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என நம்பி தம் முழுக் கவனத்தையும் அதைநோக்கி தவறாக குவித்துள்ளது. இந்த சமூகம் மனிதர்களின் மனநிலையில் குறிப்பாக ஆண்களின் மனிநிலையில் இவ்வாறு உருவாக்கியது பெண்களைப் பொறுத்தவரை மிகவும் துர்ப்பாக்கியமானதே. மேலும் இதில் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் காமம் மற்றும் பாலியல் இன்பத்தை அனுபவிப்பது என்பதும் குழந்தை பெறுவது என்பதும் இரு வேறுவேறான விடயங்கள். நமது சமூகம் இரண்டையும் ஒன்றாக இணைத்து குழப்பிவைத்திருப்பது மட்டுமில்;லாமல் பெரும்பாலான மனிதர்களையும் கஸ்டப்படுத்துகின்றது. மேலும் பாலியலுறவு புணர்தல் என்பது குழந்தை ஒன்றைப் பெறுவதற்கு மட்டுமான ஒரு செயற்பாடாக சமயங்களின் ஊடாக வரையறுத்து மனிதர்களை நம்பவைத்து பாலியலுறவு சுதந்திரத்தை இந்த சமூகம் கட்டும்படுத்துகின்றது. காம உணர்வின் இன்பத்தை மட்டும் அனுபவிப்பதற்காக பாலியலுறவில் ஈடுபடுவது எதோ பாவச் செயலாக கட்டமைத்து குற்றவுணர்வை மனிதர்களிடம் ஏற்படுத்தியது உள்ளது இந்த சமூகம். அதனால் உடலில் உருவாகும் காம இன்பத்திற்காகவோ அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களால் மேற்கொள்ளப்படும் பாலியலுறவுகளில் ஈடுபடுவதற்கான உரிமையை பல சமூகங்கள் மறைமுகமாகவும் சில சமூகங்கள் நேரடியாகவும் மறுக்கின்றது. இதன் தொடர்ச்சியான ஒரு வெளிப்பாடேகவே பிரம்மச்சாரியம் என்பது மேலானதாக சமயங்களால் முன்வைக்கப்படுகின்றது என குறிப்பிடுவது மிகையானதல்ல.

மேலும் வாலிபவயதின் ஆசை மட்;டுமல்ல உடலின் இயற்கையான தேவைக்காக பாதுகாப்பற்று காம மற்றும் பாலியலுறவு விளையாட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டiனாயாக குழந்தையையும் வழங்கி அதை வளர்ப்பதற்கான பொறுப்பையும் இந்த சமூகம் குறிப்பாக பெண்களுக்கு வழங்குகின்றது. இதானல்தான் அனுபவமில்லாத வாலிபவயது பெற்றோர்கள் (teen parents) பலர் உருவாகின்றனர். இவ்வாறான இளம் பெற்றோர் உருவாவதற்கு காமம் மற்றும் பாலியலுறவுகள் தொடர்பான அறிவின்மையும் அது தொடர்பான சமூகத்தின் அக்கறையின்மையும் சில காணரங்களாகும். இன்றும் பெண்கள் தாம் விரும்பாத தமது கருவை கலைப்பது (abortion) தொடர்பாக பெரும் எதிர்ப்புகள் சமூகங்களில் நிலவுகின்றது. அதேவேளை பாதுகாப்பான பாலியலுறவுகளில் எவ்வாறு ஈடுபடலாம் என்பது தொடர்பான பாலியல் கல்வியை (sexual education) பாடசாலைகளில் அறிமுகப்;படுத்துவதற்கும் அதே எதிர்ப்பாளர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறு இரண்டையும் இவர்கள் எதிர்ப்பது இவர்களது இரட்டைதன்மையையே வெளிப்படுத்துகின்றனது. இதனால் குறிப்பாக முதிர்ச்சியற்ற பக்குவமற்ற இளம் பெண்கள் இளம் தாயாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் பல சிக்கல்களையும் கஸ்டங்ளையும் எதிர்கொள்கின்றனர். மறுபுறம், குடும்ப உறவுகளுக்குள் குழந்தை பெறுவதை திர்மானிப்பதற்கான உரிமை பெரும்பாலும் பெண்களுக்கு இருப்பதில்லை. ஆண்களே பெரும்பாலும் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் குழந்தைகளைப் பெரும் கருவிகள் மட்மே. மேலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பெறும் பெண்களுக்கு எதிராக தென்னாசிய சமூகங்களில் பிரச்;சனை இருக்கின்றது. அதவாது ஆண் குழந்தைகள் பெறுவதையே பெருமையாகவும் முக்கியமானதாகவும் கருதும் சமூகங்களில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றால் அவளுக்கு எதிரான, எதிர்மறை பார்வை இந்த சமூகங்களில் காணக்கிடைக்கின்றது. இத் தவறான பார்வைக்கும் அறியாமையும் புதிய அறிவுகள் பகிரப்படாமையுமே காரணமாக இருக்கின்றது. ஏனனில் மருத்துவ ஆய்வுகளின்படி ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்மானிப்பது ஆணின் விந்தே. ஆனால்; பெண்ணின் உடலிலிருந்து குழந்தை வெளிவருவதால் பெண்ணே இதற்கான பழியையும் சுமக்கின்றாள். மறுபுறம் ஒரு பெண் குழந்தை பெறுவதற்கு காரணமான முதிர்ச்சியற்ற பக்குவமற்ற இளம் ஆண்கள் எந்த பொறுப்புமின்றி சுதந்திரமாக வாழவும் இப் பொறுப்புக்களிலிருந்து இலகுவாக விடுபடக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால்தான் கருத்தடை மாத்திரைகள் பெண்களின் விடுதலைக்கான பாதையில் முக்கியமான ஒரு புரட்சிகர பங்கை வகிக்கின்றன எனக் கூறப்படுகின்றது. அதேவேளை வெள்ளைஇன ஆணாதிக்க சமூகம் இந்தக் கருத்தடை மாத்திரைகளை பிற நிற இன மனிதர்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இனவாத அடிபடையிலும் எதிர்மறையாகவும பயன்படுத்தியிருக்கின்றனர் என பல்வேறு நிற பெண்கள் (women of colour) எச்சரிக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளவும் வேண்டும். ஏனனில் அமெரிக்க அரசாங்கம் அல்லது அந்த சமூகம் 70ம் ஆண்டுக்கு முன்பு வரை கருவிலே கொன்ற வட அமெரிக்காவில் வாழும் பிற இனத்தவர்களின் குறிப்பாக கருப்பு மற்றும் பூர்விக குடிகளின் எண்ணிக்கை, ஜெர்மனியில் ஹிட்லர் கொன்ற யூதர்களைவிட, அதிகம் என கருப்பின பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர். ஆகவே ஒரு விடயம் அல்லது பொருள் யாரால்; எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொருத்து சமூகத்தில் அதற்கான பாத்திரம் வரையறுக்கப்படுகின்றது என்பதையும் நாம் இங்கு குறித்துக்கொள்வது நல்லது.

இரண்டாவது போர்க் காலங்களில் நடைபெறும் பாலியல் வன்புணர்ச்சி. அதாவது எதிரி நாட்டை அல்லது தேசத்தை ஆக்கிரமிக்கும் பொழுது அந் நாட்டுப் பெண்களை பாலியல்வன்புணர்வு செய்வது ஆணாதிக்க போர்வழிமுறைகளில் ஒரு முக்கியமான செயற்பாடாக காலம் காலமாக இருந்துவருகின்றது. இந்த சுழல்களில், பெண்கள் எதிரி நாட்டின் சொத்தாகவும் (property), அவர்களின் போர்த்தளபாடங்களுக்கு சமாந்தரமாக பொருட்களாகவும் (objects) பார்க்கப்படுகின்றார்கள். இவ்வாறான பார்வையும் அதனடிப்படையிலான செயற்பாடுகளிலும் போர்க் காலங்களில் இருபகுதிகளும் ஈடுபடுவது சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்துவருகின்றது. ஏனனில் இரு நாடுகளும் பெண்களை தமது சொத்தாக கருதுவது மட்டுமல்ல (ஒரு பக்கம் பெண்களை அடக்கிக் கொண்டு மறுபக்கம்) அவர்களை தெய்வங்களுக்கு சமமானவர்கள் என கட்டமைத்தும் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் வைத்துள்ளனர். ஆகவே பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது குறிப்பிட்ட நாட்டை அல்லது தேசத்தை அவமானப்படுத்துவது மட்டுமல்ல ஆக்கிரமித்துள்ளாதாகவும் அர்த்தப்படும். மறுபுறமும் இதே நிலைமைதான்.; ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் பெண்கள் மீது எதிரி நாடுகள் நடாத்திய பாலியல் வன்புணர்வு மற்றும் நிர்வானப்படுத்தல்கள் மூலமாக பாதிக்கப்பட நாடு அல்லது தேசம் கோவம் கொள்வது பெண்களை அப்படி செய்தார்கள் என்பதற்கும் மேலாக “நமது (சொத்தான) பெண்களை” “அவர்கள் அவ்வாறு செய்துவிட்டார்கள்” என்பதும் அதனால் அவர்களது தன்முனைப்பு (ego) பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம். அதாவது ஆண்களின் தன்முனைப்புக்கு விழ்ந்த ஒரு அடியாகவே ஆண்களால் பிரக்ஞையற்று உணரப்படுகின்றது. இது அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் ஆணாதிக்க பார்வையே என்றால் மிகையல்ல. ஆக, அனைத்துப் (இரு) பகுதிகளிலும் ஆண் பார்வையின் (patriarchal standpoint) அடிப்படையிலையே போர்களும் வன்முறைகளும் பெண்கள் மீதான வன்வுணர்ச்சிகளும் பாலியல் தூஸ்பிரயோகங்களும் அனைத்தும் நடைபெறுகின்றன.

இவ்வாறு நடைபெறும் பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக நடாத்தப்படும் போராட்ட செயற்பாடுகளில் போரை நடத்துபவர்கள் (உதராணமாக மகிந்த ராஜபக்ஸ, மற்றும் சரத் பொன்சேகா போன்றவர்கள்) மறக்கப்பட்டு பாலியல்வன்புணர்வில் ஈடுபட்ட சாதாரண இராணுவத்திரை மட்டுமே விசாரித்து தண்டனை வழங்குகின்றனர். இது ஆணாதிக்க சமூகத்தின் ஒரு இரட்டை நிலைப்பாடே. ஏனனில் நடைபெறும் போர்கள் எல்லாம் ஆணாதிக்க சிந்தனை மற்றும் அதன் வழி முறைகளிளையே நடைபெறுகின்றன. இருபகுதி இராணுவத்தினரும் அவ்வாறு செய்வதற்கு அல்லது அவ்வாறு செய்வதற்கான மனநிலை ஏற்படும் வகையிலையே அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றனர். ஒரு வகையில் சாதாரண இராணுவத்தினர் எய்தப்பட்ட அம்புகள் மட்டுமே. ஆகவே இவ்வாறான போர்க்குற்றங்களில் நியாயமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டியது போரை முன்னெடுத்த அரசியல் மற்றும் அதை வழிநடாத்தும் இராணுவ தலைவர்களையே. அப்பொழுதுதான் இவ்வாறான பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக முழுமையான தண்டணை கிடைத்ததாக கருதப்படலாம். (இதேவேளை ஆணாதிக்க சமூகத்திற்குள் வழங்கப்படும் இவ்வாறன தண்டனைகள் கேள்விகுள்ளாக்கப்படுவதுடன்; இது தொடர்பான விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.) சாதாரண இராணுவத்தினருக்கு தண்டடை வழங்கினாலும் மனநிலை சிகிச்சை அளிப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதேவேளை போர் தொடர்பான கேள்விகளும் அவை முன்னெடுக்கப்படும் விதங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுவது மட்டுமல்ல எல்லாவிதமான போர்களையும் நிறுத்தவும் குரல் கொடுக்க வேண்டும். ஏனனில் ஆணாதிக்க சமூகத்தில் நடப்பவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைத்தே இருக்கின்றன. அப்பபொழுதுதான் இதன் மூலம் ஏற்படும் அழிவுகளையும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல்; வன்புணர்வுகளை நிறுத்தவும் முடியும். ஆணாதிக்கத்தின் பிடியிலருந்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பிற மனித பால்களும் விடுதலைபெற முடியும்.

மூன்றாவது பொதுவாக ஆண்களால் குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது பெண்கள் மீது வெறுப்புக் கொண்ட பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஆண்களால்; மேற்கொள்ளப்படும் பெண்கள் மீதான அதிகாரத்துவமானதும் மற்றும் இழிவுபடுத்தும் பாலியல் வன்புணர்வாகும். இந்த ஆண்கள் தண்டனைக்கு மட்டுமல்ல மனநிலை தொடர்பான சிகிச்சைக்கும் உட்படுத்தப்படவேண்டியவர்களே. ஏனனில் ஆண்களின் இவ்வாறன பாலியல் வன்புணர்வு கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளுக்கு ஆணகளிடம் இருக்கும் மரபனுக்கள் காரணம் என ஒரு சாராரும் ஆணாதிக்க சமூக வளர்ப்பே காரணம் என இன்னுமொரு சாராரும் வாதிடுகின்றனர். இதற்கான விடை சரியாக தெரியாத நிலையில், இவ்வாறான மனிதர்கள் ஏன் உருhவாகின்றார்கள் என சிந்திப்பதும் முக்கியமானது. மறுபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளில் ஆண்கள் பெரும்பாலும் ஈடுபடுவதால், தனிமனித பொறுப்பு மற்றும் பிரக்ஞை என்பது ஒவ்வொரு ஆணிற்கும் இருக்கவேண்டியது முக்கியமானதும் அவசியமானதுமாகின்றது. இந்தப் பிரக்ஞையையும் பொறுப்புணர்வையும் எவ்வாறு வளர்ப்பது என்பது ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது அவரவர் பொறுப்பாகும். அதேவேளை இது ஒரு சமூகப் பிரச்சனையாக இருப்பதால் சமூகத்தின் பொறுப்பு என்ன என்பதும் முக்கியமானது. ஏனனில் இவ்வாறான நிகழ்வுகள் சமூகப் பிரச்சனையாகப் பார்க்காது வெறும் தனிநபர் சம்பவங்களாகப் பார்க்கப்படுவதாலையே முடிவின்றி இன்னும் தொடர்கின்றன. ஆகவே இதற்கான சமூக காரணிகளைக் கண்டு அவற்றை நீக்குவதும் மற்றும் காமம் பாலியலுறவு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அடிப்படைக் கல்வியை வழங்குவதும் குறிப்பாக மனிதர்களில் பிரக்ஞையை வளர்ப்பதும் இவ்வாறான பிரச்சனைகளை ஒரளவாவது தீர்க்க உதவலாம்.

இந்த அடிப்படையில் அண்மையில் பலரது கவனங்களையும்; ஈர்த்த நித்தியானந்தர் என்ற மனிதர் மீதான பாலியல் குற்றச்சாட்டையும் அது தொடர்பான சயமங்களின் உள் முரண்பாடுகளையும்; மற்றும் வரதராஜன் என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பிரச்சனையையும் மேலும் காமம் மற்றும் பாலியலுறவு தொடர்பான நமது சிந்தனைகளையும் அடுத்த பகுதியல் பார்க்கலாம். மேலும் இவ்வாறன பிரச்சனைகளை சமூக அக்கறையுள்ள சஞ்சிகைகள் கூட எவ்வாறு பொறுப்பற்று பிரசுரிக்கரின்றன என்பதனையும் இக் கட்டுரைத்; தொடரின் நான்காவதும் இறுதியானதுமான பகுதியிலும் ஆராயலாம்.
மீராபாரதி
(ஆண்மையும் பெண்மையும்

Advertisements

Responses

 1. An outstanding article
  regards
  b.dhuvarahan

 2. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  தர்மினி

 3. அடுத்த பகுதி….
  காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை- பகுதி 4

  https://meerabharathy.wordpress.com/2010/08/10/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae-2/


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: